close
Choose your channels

பிரபுதேவாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி குறித்த தகவல்

Sunday, January 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுதேவா நடித்த 'குலேபகாவலி, 'மெர்க்குரி', மற்றும் 'லட்சுமி' ஆகிய மூன்று படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் 6 படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆறு படங்களும் இவ்வருடம் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் பிரபுதேவா நடித்து வரும் படங்களில் ஒன்று 'சார்லி சாப்ளின் 2'. கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படமான 'சார்லி சாப்ளின்' படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் படம் 'சார்லி சாப்ளின் 2'.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் இம்மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்த படம் வரும் 26ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

பிரபுதேவா, நிக்கி கல்ராணி, பிரபு, ஆதா சர்மா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். அம்ரேஷ் கணேஷ் இசையில் செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.