பிரபுதேவாவின் 'பொன்மாணிக்கவேல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,January 24 2020]

பிரபுதேவா நடிப்பில் முகில் செல்லப்பன் இயக்கிய ‘பொன்மாணிக்கவேல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

‘பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என இந்த படத்தை தயாரித்த நேமிசந்த் ஜபக் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

பிரபுதேவா ஜோடியாக, நிவேதா பெத்துராஜ், சுரேஷ் மேனன், மகேந்திரன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இமான் இசையில் வெங்கடேஷ் ஒளிப்பதிவில் சிவாநந்தீஸ்வரர் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

நடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு: 

நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

சினேகா வீட்டிற்கு வந்த புதுவரவு: குடும்பத்தினர் மகிழ்ச்சி

சமீபத்தில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை சினேகாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய கணவரும்

கொரோனா வைராஸால் பாதிக்கப் பட்டாரா? கேரள நர்ஸ் – சவுதி சுகாதார அதிகாரி தகவல்

முன்னதாக, தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு செவிலி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை

பிரபல தமிழ் இயக்குனர் விபத்தில் சிக்கி காயம்: மருத்துவமனையில் அனுமதி!

பிரபல தமிழ் இயக்குனர் ஒருவருக்கு இன்று காலை விபத்து ஏற்பட்டு கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

0%  மாசில்லாத பருவ நிலை - உலகப் பொருளாதார மாநாட்டில் கிரேட்டா துன்பர்க் 

கடந்த வருடம் பருவ நிலை மாற்றத்தைக் குறித்து உலகத் தலைவர்களைக் குற்றம் சாட்டியிருந்தார் 16 வயது சிறுமி கிரெட்டா துன்பெர்க்