close
Choose your channels

மூன்றாம் முறையாக ரிலீஸ் தேதியை அறிவித்த 'பொன்மாணிக்கவேல்' படக்குழு

Tuesday, February 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்த திரைப்படம் ‘பொன்மாணிக்கவேல்’. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி சில மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிப் போனது என்பது தெரிந்ததே.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார்’ படத்துடன் இந்த படம் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தேதியிலும் இந்த படம் ரிலீசாகவில்லை. இந்நிலையில் தற்போது மூன்றாம் முறையாக மார்ச் 6-ம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவா ஜோடியாக, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இந்த படத்தில் சுரேஷ் மேனன், மகேந்திரன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் இமான் இசையில் வெங்கடேஷ் ஒளிப்பதிவில் சிவாநந்தீஸ்வரர் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.