close
Choose your channels

ஒரு போலீஸ்காரன் எப்ப அடிக்கணும், எப்ப அமைதியா இருக்கணும்: பொன்மாணிக்கவேல் டிரைலர்

Tuesday, January 21, 2020 • தமிழ் Comments

முதல் முறையாக பிரபுதேவா போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள ’பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

ஒரு போலீஸ்காரன் போலீஸ் டிபார்ட்மென்ட்டுக்கு வேலை செய்யணுமா? பப்ளிக்கு வேலை செய்யணுமா? என்ற வித்தியாசமான கேள்வியுடன் தொடங்கும் இந்தப் படத்தின் டிரைலர், ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பது உறுதியாகிறது.

தொடர் கொலைகள் நடப்பது, அந்தக் கொலைகளில் பயன்படுத்தப்பட்ட பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் திடீரென காணாமல் போவதும் அதை கண்டுபிடிப்பது போன்ற காட்சிகளும், அதிரடி ஆக்ஷன் சேசிங் காட்சிகளும் நிறைந்த இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது இந்த படம் ஆக்சன் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

டி.இமானின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கும் என தெரிகிறது. பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். பிரபுதேவாவின் வழக்கமான நடனமும் இந்த படத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிரைலரின் இறுதியில் ’ஒரு போலீஸ்காரன் எப்ப அடிக்கணும் எப்ப அமைதியா இருக்கணும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்’ என்ற வசனம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை முகில் செல்லப்பன் என்பவர் இயக்கியுள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz