பிரபுதேவாவின் அடுத்த படத்தை புரமோஷன் செய்யும் விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Thursday,December 09 2021]

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் பிரபுதேவாவின் அடுத்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி புரமோஷன் செய்ய உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பிள்ளை தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தேவா பிரபுதேவா நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த், பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா உள்பட பலர் நடிக்க உள்ளனர்.

டி.இமான் இசையில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ராகவன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’மஞ்சப்பை’ ’கடம்பன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

More News

பிரியங்கா என் அக்கா இல்லை: அபிஷேக்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் மூன்றே வாரத்தில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட நிலையில் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே

'அண்ணாத்த' இயக்குனருக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுத்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியான நிலையில் இந்த படத்தை பெரும்பாலான ஆன்லைன் விமர்சகர்கள் நெகட்டிவ் விமர்சனம் செய்தனர்

பாரீஸ் நகருக்கு ஓய்வெடுக்க சென்ற பிஸியான பிரபல நடிகை: வைரல் புகைப்படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் பாரிஸ் நகருக்கு ஓய்வெடுக்கச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

திடீரென கோஷம் போட்ட தாமரை: பிரியங்காவின் ரியாக்சன் என்ன தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸையே காமெடியாக கலாய்த்து ஆரம்ப காலகட்டங்களில் பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்ற பிரியங்கா, நாளாக ஆக தனது சுயரூபத்தை காண்பித்து கொண்டிருப்பதாக

ஓ சொல்றியா, ஓ ஓ சொல்றியா: 'புஷ்பா' சமந்தாவின் வீடியோ பாடல்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக