பிரபுதேவா-தமன்னாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

  • IndiaGlitz, [Thursday,June 01 2017]

இந்திய திரைப்படங்கள் அதிநவீன கேமிராக்கள் மூலம் படமாக்கப்படுவது புதியது அல்ல. 'சிவாஜி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்கள் உயர்தொழில்நுட்ப கேமிராக்களில் படமாக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் முதல்முறையாக 8K ரெசலூசன் கொண்ட கேமிரா மூலம் ஒரு படம் உருவாகவுள்ளது.
'உன்னை போல் ஒருவன்', 'பில்லா 2' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சக்ரி டோலட்டி தற்போது நயன்தாரா நடித்து வரும் 'கொலையுதிர்க்காலம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபுதேவா, தமன்னா நடிக்கவுள்ளனர். 'காமோஷி' என்ற பெயரில் உருவாகவுள்ள இந்த படம் முழுக்க முழுக்க 8K ரெசலூசன் கேமிராவில் படமாக்கப்படவுள்ளதால் இதுவே இந்தியாவின் முதல் 8K படம் என்ற பெருமையை பெறுகிறது.
இதுகுறித்து பிரபுதேவா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இந்தியாவின் முதல் 8K தொழில்நுட்பத்தில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவுள்ளேன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது. இதற்கு இயக்குனர் சக்ரிடோலட்டி, தயாரிப்பாளர் வாஷூ பாக்னானி ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். இந்த படத்தில் பூமிகா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.