close
Choose your channels

சசிகலாவுடன் சிவாஜி குடும்பத்தினர் சந்திப்பு

Sunday, January 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவர் வகித்து வந்த சக்தி வாய்ந்த பதவியான அதிமுக பொதுச்செயலாளர் பதவியை நேற்று அவரது தோழி சசிகலா பொறுப்பேற்று கொண்டார். அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு அரசியல் தலைவர்களும், கோலிவுட் திரையுலகினர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சிவாஜி குடும்பத்தினர் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்தனர். பிரபு மற்றும் அவரின் சகோதரர் ராம்குமார் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் சென்று மரியாதை நிமித்தமாக சசிகலாவை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சிவாஜி குடும்பத்தினர்களை அடுத்து திரைப்பட சண்டைக் காட்சி அமைப்பாளர் ஜாகுவார் தங்கம், நடிகர் விஜயகுமார் ஆகியோர்களும் சசிகலாவை சந்தித்துள்ளனர். அதுமட்டுமின்றி மேலும் சில கோலிவுட் பிரபலங்கள் சசிகலாவை மரியாதை நிமித்தம் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.