ஹாட்ஸ்டாரில் பிரபு சாலமனின் 'செம்பி' திரைப்படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 28 2023]

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்த இயக்குநர் பிரபு சாலமனின் செம்பி திரைப்படம், பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் பிரபு சாலமனின் 'செம்பி' திரைப்படத்தைப் பிப்ரவரி 3 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தில் நடிகை கோவை சரளா, குழந்தை நட்சத்திரம் நிலா மற்றும் 'குக் வித் கோமாளி' புகழ் அஷ்வின் குமார் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். தனது 10 வயது பேத்தி செம்பிக்கு (நிலா) நிகழ்ந்த கொடுமைக்கு, நீதி கேட்கும் வீரத்தாய் (கோவை சரளா) என்ற பழங்குடியினப் பெண்ணைப் பற்றியது தான் இந்த சக்திவாய்ந்த மற்றும் அழுத்தமான திரைப்படம்.

தமிழின் முன்னணி இயக்குநரான பிரபு சாலமனின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'செம்பி' பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளைக் குவித்துள்ளது. தமிழ் திரையுலகின் மூத்த நகைச்சுவை நடிகை கோவை சரளா இதுவரையிலும் கண்டிராத வித்தியாசமான பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் கோவை சரளாவின் நடிப்பு திரை விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. பலர் இது அவரது திரை வாழ்க்கையின் மிகச்சிறந்த நடிப்பாக இப்படத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளனர். 'செம்பி'யாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பத்து வயதுக் குழந்தை நட்சத்திரமான நிலா, இந்தப் படத்தைப் பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளையடிக்கும் நட்சத்திரமாக மிளிர்கிறார். ஒளிப்பதிவாளர் ஜீவனின் மனதை அள்ளும் காட்சிகளும், நிவாஸ் K பிரசன்னாவின் தீவிரமான பின்னணி இசையும் ‘செம்பி’ திரைப்படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறது.

பிப்ரவரி 3 முதல் செம்பி திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

More News

'சூர்யா 42' படத்தில் இணையும் இளவரசி நூர்ஜஹான்? 

 சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் இளவரசி நூர்ஜஹான் இணைந்துள்ளதாக தகவல் .

தளபதி விஜய் மகன் சஞ்சயின் முதல் படம் ஆரம்பம்.. வைரல் வீடியோ

 தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் முதல் படம் குறித்த தகவல் வெளியாகி அது குறித்த வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. 

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணையும் பாலிவுட் நடிகர்.. நிஜமான பான் - இந்தியா படமா?

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் இணைந்த

என் கணவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை.. டான்சர் ரமேஷ் மனைவி  திடுக் தகவல்

 டிக்டாக் மூலம் பிரபலமாகி சினிமாவிலும் நடித்து வந்த டான்சர் ரமேஷ் திடீரென நேற்று பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வெளியானது.

நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா திடீர் கைது.. என்ன காரணம்?

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.