close
Choose your channels

நாங்கள் மூவரானோம்: மகத், குழந்தையுடன் பிராச்சி மிஸ்ரா பகிர்ந்த புகைப்படம்!

Friday, June 11, 2021 • தமிழ் Comments

நடிகர் மகத் மற்றும் பிராச்சி மிஸ்ரா தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குழந்தை பிறந்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் அறிவித்திருந்த மகத், அதன்பின்னர் தனது சமூக வலைத்தளத்தில் நெகழ்ச்சியான நீண்ட பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த பதிவு அனைவரையும் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மகத் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பிராச்சி மிஸ்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். அதில் ’நாங்கள் இப்போது மூவரானோம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இன்னொரு புகைப்படத்தில் குழந்தையின் படுக்கையை பகிர்ந்த பிராச்சி மிஸ்ரா, இந்த படுக்கையில் நான் எனது குழந்தையை படுக்க வைப்பதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz