சட்டை இல்லாமல் பிரதீப்.. செம்ம ஸ்டைலில் மமிதா பாஜூ.. 'டியூட்' செகண்ட் லுக்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பாஜூ நடிக்கும் படத்தின் டைட்டில் "டியூட்" என்று நேற்று அறிவிக்கப்பட்டது. அதோடு, நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில், இன்று செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் பிரதீப் ரங்கநாதன் சட்டை இல்லாமல் இருக்கும் காட்சியும், அவர் அருகே செம ஸ்டைலில் மமிதா பாஜூ இருக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இதனால், இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
"தீபாவளி வெளியீடு" என நேற்றைய போஸ்டரில் அறிவித்தது போல், இன்றும் அதே வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குனர் சுதா கொங்காரா உதவியாளர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சாய் அபிநயங்கர் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு
விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த படம் பிரதீப்புக்கு ஹாட்ரிக் வெற்றி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
The #DUDE is coming with his LOVE for a Blasting & Entertaining Diwali in theatres ❤🔥🥁
— Mythri Movie Makers (@MythriOfficial) May 11, 2025
All set for a MASSIVE DIWALI 2025 RELEASE 💥💥
In Tamil, Telugu, Kannada, Malayalam & Hindi.
⭐ing 'The Sensational' @pradeeponelife
🎬 Written and directed by @Keerthiswaran_
A… pic.twitter.com/cv9ZM5GR9G
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com