வடிவேலு காமெடி வீடியோவை பதிவு செய்து நன்றி சொன்ன பிரதீப்.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Monday,November 06 2023]

பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் வடிவேலு காமெடி வீடியோவை பதிவு செய்து ’எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். பிரதீப் ஆண்டனி அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், எல்லை மீறி செயல்பட்டதாகவும் அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து பிக் பாஸ் நிர்வாகம் பிரதீப் ஆண்டனியை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டது. அவருடைய வெளியேற்றத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். வடிவேலு காமெடி வீடியோவை ஒன்றை பதிவு செய்த அவர், சமூக வலைதளங்களில் தனக்கு கிடைத்த ஆதரவுக்கு மிகவும் நன்றி, கூட நின்றதற்கு நன்றி, என்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல நடிகராக முயற்சி செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டைட்டில் பட்டம் பெற தகுதியான போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் கண்டிப்பாக திரையுலகில் அவர் ஜொலிப்பார் என்று நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

ரெட் கார்டையே கொண்டாட்டமாக மாற்றிய பிரதீப்.. வைரல் புகைப்படங்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரெட்கார்ட் கொடுத்து அனுப்பப்பட்டது, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது

அப்ப எல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு உங்களுக்கு தெரியாதா? 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும்  பிரதீப் மீது குற்றம் சாட்டியவர்களை கடுமையாக விமர்சனம் செய்து

ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்ட அமலாபால்.. வைரல் புகைப்படம்..!

நடிகை அமலா பால் தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து புகைப்படத்தையும் பதிவு செய்திருப்பதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பார்த்திபன் அடுத்த படத்தில் ஸ்ருதியின் பணி இதுதான்..

இயக்குனர் பார்த்திபன் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் சகலகலாவல்லிக்கு எதற்கு பூங்கொத்து என்று ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் கலக்கிய மாஸ் நடிகர்.. கமல் அடுத்த படத்தில் இணைகிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் கலக்கிய மாஸ் நடிகர் தற்போது கமல்ஹாசன் அடுத்த படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.