அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் ஆகும் பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள்.. 'LIK' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் ’டியூட்’ என்ற படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு முன்பே ‘LIK’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப், அதன் பின் ’லவ் டுடே’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இயக்கினார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்தது. அதன் பின்னர் ’டிராகன்’ என்ற படமும் அவருக்கு வெற்றி படமாக அமைந்த நிலையில் தற்போது அவர் ’டியூட்’ மற்றும் ‘LIK’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ’டியூட்’ திரைப்படம் ஐந்து மொழிகளில் தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தீபாவளி அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது செப்டம்பர் 18ஆம் தேதி ‘LIK’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று பிரதீப் ரங்கநாதன் சற்றுமுன் அறிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகிபாபு, மிஷ்கின், ஆனந்த்ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி, கெளரி கிஷான், மணிமேகலை, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரெளடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com