பிரதீப் - மமிதா பாஜூ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக மமிதா பாஜூ நடிக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில், இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி நடித்த "கோமாளி" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அதன்பின் "லவ் டுடே" என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த "டிராகன்" என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனின் நான்காவது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா உதவியாளர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் நாயகி மமிதா பாஜூ நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கு "டியூட்" என்ற தலைப்பு வைக்கப்பட்டு, டைட்டிலுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. அதில் கையில் மஞ்சள் தாலிக்கயிறை சுற்றிக்கொண்டு பிரதீப் ரங்கநாதன் இருப்பது போன்ற காட்சி உள்ளது. மேலும் இந்த படம் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும், சாய் அபிநயங்கர் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ஹாட்ரிக் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Make way for the 'DUDE', coming to entertain you all BIG TIME 💥💥#PR04 is #DUDE ❤🔥
— Pradeep Ranganathan (@pradeeponelife) May 10, 2025
All set for a MASSIVE DIWALI 2025 RELEASE 💥💥
In Tamil, Telugu, Hindi, Kannada
Written and directed by talented @Keerthiswaran_
A sensational @SaiAbhyankkar musical
Produced by… pic.twitter.com/6S2t1bOXHi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments