பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தை தயாரிக்கும் அஜித் பட நிறுவனம்.. இன்று முதல் படப்பிடிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்தை தயாரிக்கும் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவீ மேக்கர்ஸ் நிறுவனம் ஏராளமான தெலுங்கு படங்களை தயாரித்துள்ளது. மேலும், சில மலையாள, இந்தி படங்களையும் தயாரித்த நிலையில், இந்நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பாக ’குட் பேட் அக்லி’ அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தமிழ் படமாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளார். சாய் அபிநயங்கார் இசையில் உருவாகும் இந்த படத்தில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பாஜூ நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடிக்க உள்ளார்.
இது குறித்து பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் குறிப்பிட்டு, ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே ’லவ் டுடே’’டிராகன்’ ஆகிய இரு படங்களில் நடித்த பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் அவரது நான்காவது திரைப்படமாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Associating with the prestigious @MythriOfficial . Launching talented and sincere @Keerthiswaran as director for #PR04 #PR04 'FIRST SHOT BOOM' out tomorrow at 11.07 AM 💥💥 #FirstShotBoom#PR04#MythriTamil02
— Pradeep Ranganathan (@pradeeponelife) March 25, 2025
A #SaiAbhyankkar musical
Produced by @MythriOfficial
⭐️ing… pic.twitter.com/XkWz0pRcLS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments