close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு

Tuesday, September 11, 2018 • தமிழ் Comments

தமிழ் சினிமாவின் இளம் நாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்த 'டிக் டிக் டிக்' சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றதை அடுத்து அவர் தற்போது 'அடங்க மறு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் ஜெயம் ரவி மீண்டும் மோகன் ராஜாவுடன் இணைந்து 'தனி ஒருவன் 2' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விரைவில் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் இன்னொரு படத்தை பிரதீப் ரெங்கநாதன் என்பவர் இயக்கவுள்ளார். இந்த தகவலை ஜெயம் ரவி நேற்று தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். இந்த படம் ஜெயம் ரவியின் 24வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.