சந்திரனில் வெற்றி, சதுரங்கத்தில் தோல்வி.. உலககோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா போராடி தோல்வி..!

கடந்த சில நாட்களாக உலக கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இதன் இறுதிப் போட்டி சமீபத்தில் தொடங்கியது என்பதும் இதில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் பிரக்ஞானந்தா மோதினர் என்பதும் தெரிந்ததே.

இதில் முதல் இரண்டு சுற்றுகள் டிரா ஆனதால் இன்று மூன்றாவது டை-பிரேக்கர் சுற்று ஆரம்பமானது. இதில் வெற்றி பெறும் நபருக்கு தான் உலக கோப்பை சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் டை-பிரேக்கர் முதல் சுற்றில் நார்வையின் கார்ல்சன் வெற்றி பெற்றார். இதனால் டை-பிரேக்கர் இரண்டாவது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலை இருந்தது. இரண்டாவது சுற்று டிரா ஆனால் கூட கார்ல்சன் வெற்றி பெறுவார் என்ற நிலையில் இரண்டாவது சுற்றிலும் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.

இதனை அடுத்து உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் டை-பிரேக்கர் சுற்றின் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற கார்ல்சன் உலக கோப்பையை வென்றார். அவருக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தோல்வி அடைந்த இந்தியாவின் பிரக்ஞானந்தா கடைசி வரை போராடியதற்காக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நேற்று சந்திரனுக்கு இந்திய விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 வெற்றி பெற்ற நிலையில் இன்று சதுரங்கத்திலும் இந்தியா சாதிக்கும் என்று நினைத்த நிலையில் துரதிஷ்டவசமாக பிரக்யானந்தா தோல்வி அடைந்தார்.

More News

கவர்னர் கையால் டாக்டர் பட்டம் பெற்ற இளம் இசையமைப்பாளர்.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் திரை உலகின் இளம் இசையமைப்பாளர் இன்று, கவர்னர் ஆர்.என் ரவி கையால் டாக்டர் பட்டம் பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பெசன்ட் நகர் பீச்சில் சண்டை போட்ட இருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களா? டிஆர்பி எகிறும் என தகவல்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்த மாதம் முதல் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவின் திருமணத்தன்று லாஸ்லியா போட்ட பதிவு.. பதிலடி கொடுத்த மோனிகா..!

நடிகர் கவின் சமீபத்தில் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்தன்று பிக்பாஸ் லாஸ்லியா செய்த பதிவுக்கு தற்போது மோனிகா பதிலடி கொடுக்கும்

சூர்யா, தனுஷ், ஆர்யா.. இன்று மாலை அதிர்ஷ்டம் அடிக்க போவது யாருக்கு?

 சூர்யா, தனுஷ் மற்றும் ஆர்யா ஆகிய மூவரில் ஒருவருக்கு இன்று மாலை அறிவிக்கப்படும் தேசிய விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'விக்ரம்' மாதிரி ஒரு மாஸ் சீன் 'லியோ'வில்: ஸ்டண்ட் மாஸ்டர் தகவல்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படமான 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகிய மூவரும் இடைவேளை காட்சியின் போது தோன்றுவார்கள் என்பதும் அந்த காட்சி மிகவும் மாஸ் ஆக இருக்கும் என்பது