close
Choose your channels

மகத் வீட்டில் நடந்த விசேஷம்: வைரலாகும் புகைப்படங்கள்

Sunday, May 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், பிரபல மாடல் அழகி பிராய்ச்சி மிஸ்ராவை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்ததே. இந்த திருமணத்திற்கு சிம்பு உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மகத் மற்றும் பிராச்சி தேசாய் தம்பதிகள் தற்போது அப்பா அம்மாவாக உள்ளனர். ஆம், பிராய்ச்சி மிஸ்ரா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சி மிகவும் எளிமையாக நடத்தப்பட்டதாக பிராய்ச்சி மிஸ்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் பார்ப்பதற்கு அம்மா கரடி போல் இருப்பதாகவும் இந்த நிகழ்வு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் உண்மையிலேயே மிகவும் பாசிட்டிவ்வாக உணர்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வளைகாப்பு நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.