close
Choose your channels

விஷால்-ஆர்யாவின் 'எனிமி'யில் இணைந்த இன்னொரு 'எனிமி'

Thursday, November 26, 2020 • தமிழ் Comments

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டைட்டில் ‘எனிமி’என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து தங்களது ட்விட்டர் பக்கங்களில் அறிவித்தனர் என்பதும் இந்த டைட்டில் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

விஷால் மற்றும் ஆர்யா நிஜத்தில் நண்பர்களாகவும் இந்த படத்தில் எனிமிகளாகவும் நடிக்க இருப்பது அவர்களது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் விஷால், ஆர்யா ஆகிய இருவரில் யாருக்கு ‘எனிமி’ என்பதை படம் வெளியாகும் வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

தமன் இசையமைக்கும் இந்த படத்தில் மிருணாளினி நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் முடிந்துவிடும் என்றும் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 

Get Breaking News Alerts From IndiaGlitz