டெல்லி முதல்வரை சந்தித்த பிரபல தமிழ் நடிகர்

  • IndiaGlitz, [Thursday,January 10 2019]

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று சந்தித்துள்ளார்

கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்திய பெங்களூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் அறிவித்தார். அவருக்கு கமல்ஹாசன், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று டெல்லி சென்ற பிரகாஷ்ராஜ் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். பிரகாஷ்ராஜ் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தவுடன் வாழ்த்து தெரிவித்தவர்களில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரகாஷ்ராஜ் போட்டியிடும் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்கும் என அறிவித்துள்ளது. இதனையடுத்து பிரகாஷ்ராஜ், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

More News

விஸ்வாசம்: சிறப்பு காட்சியில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்கள்

'காதல் மன்னனான' தல அஜித்துக்கு கோடிக்கணக்கான ஆண் ரசிகர்கள் இருப்பது போலவே பெண் ரசிகைகளும் மிக அதிகம் என்பது தெரிந்ததே.

'பேட்ட' படம் பார்க்க ஜப்பானிலிருந்து சென்னை வந்த ரஜினி ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் தலைவரை திரையில் பார்க்க ரஜினி ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்தனர்.

விஸ்வாசம் பேனர் சரிந்து ஐந்து பேர் படுகாயம்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இது லவ் மேரேஜ்: மணமகள் அனிஷா குறித்து விஷால்

நடிகரும் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலுக்கு அவரது பெற்றோர்கள் ஐதராபாத் தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷா பெண் பார்த்துள்ளதாகவும்

'பேட்ட' விஸ்வாசம் திரையிட்ட திரையரங்குகளுக்கு அபராதம்?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'பேட்ட' மற்றும் அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகியிருந்தது