யாருமே இப்ப வாயை திறப்பதில்லை: பிரபல நட்சத்திரங்களை போட்டு தாக்கும் பிரகாஷ்ராஜ்!

  • IndiaGlitz, [Wednesday,July 20 2022]

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் அரசுக்கு எதிராக குரல் கொடுத்த நட்சத்திரங்கள் தற்போது அமைதியாக இருக்கின்றனர் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் பிரகாஷ்ராஜ் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட அவர் ராமர் அனுமார் மற்றும் இந்திய தேசிய சின்னம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்து அப்போதும் இப்போதும் எப்படி இருக்கிறது என கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் திரையுலக பிரபலங்கள் மத்திய அரசுக்கு எதிராக தங்களது ட்விட்டர் பக்கங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது அனைவருமே அமைதியாக இருக்கின்றனர் என்று அவர் பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி கடந்த 2012ஆம் ஆண்டு பெட்ரோல் விலை ஏற்றத்தை கிண்டல் செய்த டுவிட்டையும், பிரபல நடிகர் அனுபம் கேர் இந்திய ரூபாய் மதிப்பு சரிவை விலாசியதையும், நடிகை ஷில்பா செட்டி இந்திய ரூபாயை வென்டிலேட்டர் இழுத்துக் கொண்டிருக்கிறது என்று கலாய்த்த டிவிட்டையும் பதிவு செய்து கலாய்த்துள்ளார். அதேபோல் அமிதாப்பச்சன், ஜூஹி சாவ்லா உள்ளிட்ட பிரபலங்கள் விலைவாசி உயர்வு குறித்து பதிவு செய்த டுவிட்டை பதிவு செய்து இவர்கள் எல்லாம் தற்போது ஏன் வாயை திறப்பதில்லை என்பதை மறைமுகமாக கிண்டல் செய்யும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த பதிவு செய்துள்ளார்.

More News

குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் பீச்சில் பிகினி போட்டோஷூட்: நடிகையின் வீடியோ வைரல்!

தமிழ் நடிகை ஒருவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அவர் பீச்சில் பிகினி உடையுடன் கூடிய போட்டோஷூட் வீடியோவை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மாஸ் நடிகர்களுக்கு இணையாக 4 மணி காட்சி: அசத்தும்  'தி லெஜண்ட்' திரைப்படம்!

 தமிழகத்தை பொறுத்தவரை மாஸ் நடிகர்களுக்கு மட்டுமே அதிகாலை 4:00 காட்சிகள் திரையிடப்படும் நிலையில் அறிமுக நடிகரான அருள் சரவணன் நடித்துள்ள 'தி லெஜண்ட்' திரைப்படம் 4 மணி காட்சி

படத்தை விமர்சனம் செய்ய ரூ.3 லட்சம் கேட்டாரா புளுசட்டை மாறன்? பார்த்திபனின் ஆடியோ வைரல்!

பிரபல திரைப்பட விமர்சகர் புளுசட்டை மாறன் படத்தை விமர்சனம் செய்ய மூன்று லட்ச ரூபாய் ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டதாக நடிகர் இயக்குனர் பார்த்திபன் ஆடியோ ஒன்றில்

ஓடிடியில் வெளியாகும் தமன்னாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவின் அடுத்த திரைப்படம் ஹாஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதவனின் 'ராக்கெட்டரி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மாதவன் நடித்து தயாரித்து இயக்கிய 'ராக்கெட்டரி' திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பது தெரிந்ததே.