அஜித்தின் 'வலிமை'யில் நடிக்கின்றேனா? பிரசன்னா தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,January 21 2020]

தல அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல நடிகர் பிரசன்னா நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியானதும், இந்த தகவலை பிரசன்னாவும் மறுக்கவில்லை என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிரசன்னா இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தல அஜித்தின் ‘வலிமை’ படத்தில் நான் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியும் உண்மைதான் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது என்பதும் உண்மைதான் என்றும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு முக்கிய படம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன்

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை இது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். இருப்பினும் தல அவர்களுடன் விரைவில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். தல அஜித் ரசிகர்கள் என் மீது காட்டிய அன்புக்கு நன்றி’ என்று பிரசன்னா கூறியுள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து ‘வலிமை’ படத்தில் பிரசன்னா நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது
 

More News

மன்னிப்பு கேட்க முடியாது - ரஜினிகாந்த் அதிரடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பேசியது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவமரியாதையாக பேசி விட்டதாகவும்

சமந்தா படத்தின் முக்கிய அறிவிப்பு: த்ரிஷா ரசிகர்கள் ஆச்சரியம்!

விஜய் சேதுபதி த்ரிஷா நடித்த '96' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் இடம் பெற்ற ராம், ஜானு ஆகிய இரண்டு கேரக்டர்களையும்

சுந்தர் சியின் 'அரண்மனை 3' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' நடிகை!

சுந்தர் சி இயக்கிய வெற்றிப் படங்களான அரண்மனை மற்றும் அரண்மனை 2' ஆகிய படங்களை அடுத்து 'அரண்மனை 3' திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாகவும்

நீயெல்லாம் என் ரசிகன்னு சொன்னா எனக்குத்தான் அவமானம்: சொன்னது யார் தெரியுமா?

கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்களும் நடிகை கஸ்தூரியும் சமூகவலைதளத்தில் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டிருப்பதால் டுவிட்டர் இணையதளம் பெரும் பரபரப்பில் உள்ளது

இதுதான் விஜய்யின் பவர்: 'மாஸ்டர்' படத்தை வாங்கிய நிறுவனத்தின் பரபரப்பான டுவீட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.