close
Choose your channels

அஜித்தின் 'வலிமை'யில் நடிக்கின்றேனா? பிரசன்னா தகவல்!

Tuesday, January 21, 2020 • தமிழ் Comments

தல அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல நடிகர் பிரசன்னா நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியானதும், இந்த தகவலை பிரசன்னாவும் மறுக்கவில்லை என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிரசன்னா இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தல அஜித்தின் ‘வலிமை’ படத்தில் நான் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியும் உண்மைதான் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது என்பதும் உண்மைதான் என்றும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு முக்கிய படம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன்

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை இது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். இருப்பினும் தல அவர்களுடன் விரைவில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். தல அஜித் ரசிகர்கள் என் மீது காட்டிய அன்புக்கு நன்றி’ என்று பிரசன்னா கூறியுள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து ‘வலிமை’ படத்தில் பிரசன்னா நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது
 

Get Breaking News Alerts From IndiaGlitz