விஷால்-மிஷ்கின் 'துப்பறிவாளன்' படத்தில் இன்னொரு பிரபல ஹீரோ

  • IndiaGlitz, [Monday,August 29 2016]

விஷால் நடித்து வரும் 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் அவர் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' என்ற த்ரில் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று விஷாலின் வரவிற்காக படக்குழு காத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிகர் பிரசன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பிரச்சன்னா ஏற்கனவே கடந்த 2008ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'அஞ்சாதே' படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 'துப்பறிவாளன்' படத்தில் பிரசன்னா வில்லனா? அல்லது இன்னொரு ஹீரோவா? என்பது குறித்து விரைவில் தெரிய வரும் என கூறப்படுகிறது.
விஷாலுக்கு ஜோடியாக முதல்முறையாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கவுள்ளார். இவர் ஏற்கனவே மிஷ்கினின் 'பிசாசு' படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கின்றது.