தனுஷூக்கு இந்த திறமையும் உண்டா? நடிகர் பிரசன்னா வெளியிட்ட ஆச்சரிய வீடியோ

  • IndiaGlitz, [Thursday,July 28 2022]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து இருக்கிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் பியானோவில் இசையமைக்கும் வீடியோவை நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று தனுஷின் பிறந்த நாளையொட்டி அவர் நடித்து வரும் ’வாத்தி’ படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நடிகர் தனுஷூக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகர் பிரசன்னா அவர் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தனுஷூக்கு பியானோ வாசிக்கவும்ம் தெரியுமா என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியராக இருக்கும் தனுஷ் விரைவில் இசையமைப்பாளராக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

பிரபல நடிகர்-இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி: கோலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் ஜிஎம் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கர்-ராம்சரண் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: காரணம் இந்த பெண் தான்!

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகிவரும் 'ஆர்சி 15' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பெண் அதிகாரியால்

கடவுள் ஆசீர்வதிக்கட்டும்: சற்றுமுன் ரஜினியின் ஆசி யாருக்கு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என டுவிட் செய்துள்தை அடுத்து இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது

'குக் வித் கோமாளி' நடிகை வீட்டில் தனுஷ்-செல்வராகவன்: வைரல் புகைப்படங்கள்!

 'குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மூன்றாவது ரன்னர் அப் இடத்தை வென்ற நடிகையின் வீட்டிற்கு தனுஷ் மற்றும் செல்வராகவன் வந்திருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன

உருகி உருகி பிறந்த நாள் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருகி உருகி பிறந்தநாள் வாழ்த்தை தனது தாயாருக்கு தெரிவித்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.