ஹேய் பொண்டாட்டி.. திருமண நாளில் மனைவி சினேகாவை கொஞ்சிய பிரசன்னா.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,May 11 2023]

நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா திருமணநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது திருமண நாளில் ‘ஹேய் பொண்டாட்டி’ என்று தொடங்கி ஒரு பதிவை பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த ரொமான்ஸ் பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் பிரசாந்த், சினேகா இருவரும் இணைந்து நடித்தபோதுதான் காதலிக்க தொடங்கினர் என்பதும் அதன் பிறகு இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரசன்னா - சினேகா திருமணம் முடிந்து 11 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் திருமண நாளை இந்த நட்சத்திர தம்பதிகள் சிறப்பாக கொண்டாடினார். திருமண நாளை முன்னிட்டு நடிகர் பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த ரொமான்ஸ் பதிவு இதோ:

ஏய் பொண்டாட்டி இந்த சிறப்பு நாளில் நான் உன்னிடம் சொல்ல விரும்புவது என்னுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இருந்தாலும், உன் கையை பிடித்துக் கொண்டு சென்ற நான் நிறைய கற்றுக் கொண்டேன். உன்னுடன் நான் மேற்கொண்ட இந்த பயணத்திற்கு நன்றி உடையவனாக இருப்பேன். நான் எவ்வளவோ கஷ்டங்கள் மற்றும் சவால்களை சந்தித்து இருக்கிறேன், அப்போதெல்லாம் நீ என் பக்கத்தில் இருந்ததால் எந்த கஷ்டமும் என்னை எதுவும் செய்ய முடியவில்லை.

உன்னுடைய அன்பு என்னை வழி நடத்தியது, எனக்கு ஏற்பட்ட இருள் அனைத்தையும் விரட்டும் ஒளி நீயாகும். உன்னை என் துணையாக பெற்றதற்கு நான் மிகவும் நன்றி உடையவனாக இருக்கிறேன், நம் குழந்தைகள் விலை மதிப்புள்ள பரிசுகள், கடவுளின் ஆசிர்வாதத்தால் உன்னுடைய அன்பால் உன்னுடைய புன்னகையால் என் உலகத்தை நீ அற்புதமாக வைத்திருக்கிறாய். உன் கைகளைப் பிடித்துக் கொண்டு தொலைதூர நாடுகளுக்கு, புரியாதை பாதைகளுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்

என்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத உன் அன்பில் மீண்டும் ஒரு வருடம் கழிந்து உள்ளது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், என் அன்பே, என் கண்ணம்மா. ஒவ்வொரு கணத்தையும் ஒவ்வொரு நொடியையும் நாம் சிறப்பாக வாழ்வோம். உன்னை நான் எப்போதும் காதலிக்கிறேன், நம் காதல் வலுவாகவும் உயர்ந்ததாகவும் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் பின்குறிப்பாக ’நம்மைப் பற்றிய மில்லியன் கணக்கில் வதந்தி வந்தாலும் அந்த வதந்திகள் தவிடு பொடியாக ஆகட்டும் , நாம் நம் வாழ்க்கையை முழுமையாக வாழ்வோம்’ என்று பிரசன்னா தெரிவித்துள்ளார்.

More News

'மாமன்னன்' திரைப்படம் மாரி செல்வராஜ் சினிமா யுனிவர்ஸ் படமா? ஆச்சரிய தகவல்..!

பொதுவாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் தான் அவரது முந்தைய படங்களின் கேரக்டர்கள் வரும் என்றும் எனவே அவரது படங்களை எல்சியூ படங்கள் அதாவது லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் என்று

6ஆம் வகுப்பு படிக்கும்போது கிரிக்கெட் வீரரை காதலித்தேன்: ஐஸ்வர்யா லட்சுமி

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும்  பூங்குழலி என்ற கேரக்டரில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தான் ஆறாம் வகுப்பு

எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படம் 10 பாகங்களா? அவரே அளித்த தகவல்..!

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலியின் அடுத்த படம் 10 பாகங்களாக உருவாக வாய்ப்பு இருப்பதாக அவரே அளித்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சம்மருக்கு இதுதான் சரி… 'அனேகன்' பட நடிகையின் நீச்சல் உடைக்கு ரசிகர்கள் 'நச்' கமெண்ட்!

தமிழ் சினிமாவில் இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘அனேகன்’ திரைப்படத்தில் நடித்து க்யூட்டான ரியாக்ஷன்

ஆட்டிசம் குறைபாடு… ஆனால் ஐன்ஸ்டீனைவிட அதிக IQ-வோடு சாதித்துக் காட்டிய சிறுமி!

அறிவுக் கூர்மைக்கும் உடல் குறைபாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் 11 வயது சிறுமியான சான்செஸ்.