இந்த மாதிரி போக்கிரிகளை தண்டிக்க வேண்டும்: நடிகர் பிரசன்னா ஆவேசம்

  • IndiaGlitz, [Tuesday,July 14 2020]

கடந்த சில நாட்களாக கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து முருக பக்தர்கள் உள்பட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் பிரசன்னா தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது: எவரும்‌ எவருடைய நம்பிக்கையையும்‌ ஓரளவு கடந்து விமர்சிக்கிறேனென்று கொச்சைப்படுத்துவது பெரிதாய்‌ பேசப்படும்‌ மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரையேன்‌ கேட்பதில்லை இவரையேன்‌ கேட்பதில்லை என்கிற வாதமும்‌ பயன்‌ தராது. அவரவர்‌ நம்பிக்கை அவரவர்க்கு பெரிது. அதை மதிக்கத்தெரியாத போக்கிரிகள்‌ யாராயினும்‌ எவர்க்கெதிராயினும்‌ தண்டிக்கப்பட்டால்‌ மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும்‌!

மதச்சார்பின்மையில்‌ நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில்‌ மதநம்பிக்கையினும்‌ அதிமுக்கியம்‌ என்று தெரிவித்துள்ளார். நடிகர் பிரசன்னாவின் இந்த கருத்துக்கு பெரும்பாலும் ஆதரவான கமெண்ட்டுக்களும் சில எதிர்ப்பு கருத்துக்களும் பதிவாகி வருகின்றன

More News

ராமர் நேபாளி, உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது: நேபாளம் பிரதமரின் சர்ச்சை கருத்து

ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி தற்போதுதான் சாதகமான தீர்ப்பைப் பெற்று உள்ளது.

கொரோனா முடிந்ததும் என் முதல் வேலை இதுதான்: அஞ்சலி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமியின் கொரோனா சோதனை ரிசல்ட்: பரபரப்பு தகவல்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் நேற்று கூட தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி பலி: கொரோனாவின் கொடூர முகம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் தங்கள் உயிரை பணயம்

திரையுலகில் இல்லாத விஜயகுமாரின் ஒரே மகள்!: வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் குடும்பத்திலுள்ள அனைவருமே கிட்டத்தட்ட திரையுலகில் இருக்கும் நிலையில் அவரது ஒரே ஒரு மகள் மட்டும் திரை உலகிலிருந்து சம்பந்தம் இல்லாமல் இருக்கிறார்