விஜய்க்கு அரசியல் ஆலோசனை சொல்வாரா பிரசாந்த் கிஷோர்? அவரே அளித்த பதில் இதுதான்..!

  • IndiaGlitz, [Thursday,February 22 2024]

தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதற்கு இடையில் இருக்கும் இரண்டு ஆண்டுகள் தனது கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட போவதாகவும் கூறப்படுகிறது.

இதற்காகவே அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறப் போகிறார் என்றும் அவரது ரசிகர்களும் கட்சியின் தொண்டர்களாக மாறி கட்சியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பும் பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்க்கு அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். விஜய்க்கு நான் ஆலோசகராக மாட்டேன், விஜய் விரும்பி கேட்டாலும் கூட அவருக்கு முழு நேர ஆலோசகராக இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் என்னை மதித்து என்னிடம் வருபவர்களுக்கு என்னால் முடிந்த அறிவுரைகளை கொடுப்பேன் என்றும் அவர் கூறினார். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் அவர் எந்த தமிழக கட்சிக்கும் ஆலோசகராக இருக்க போவதில்லை என்றும் இந்த செய்திகள் வெளியாகி உள்ளது.

More News

பிரதமர் மோடிக்கு உணவு கொடுப்பதை நிறுத்துங்கள்; தமிழ் நடிகரின் ஆவேச பதிவு..!

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் பிரதமர் மோடிக்கு உணவு கொடுப்பதை நிறுத்துங்கள் என தமிழ் நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வாரம் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. ஆனாலும் சூப்பர் படம்: ஓடிடி ரிலீஸ் தகவல்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் அந்த படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன

மதுரை வீரன் தானே.. நயன்தாரா வீட்டுக்கு பாதுகாவலராக வந்த சாமி சிலை..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீட்டுக்கு மதுரை வீரன் சிலை வந்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜயகாந்த் நினைவிடத்தில் மோகன்.. இருவரும் இணைந்து எத்தனை படத்தில் நடித்திருக்கிறார்கள்?

கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமான நிலையில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாட்டு அடி ஆட்டம் 𝚁𝙴𝙿𝙴𝙰𝚃... அடுத்த பட அப்டேட் கொடுத்த பிரபுதேவா..!

பிரபுதேவா நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நிலையில் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று