விஜய் 60' படத்தின் எடிட்டர் பெயர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,November 19 2015]

இளையதளபதி விஜய் நடிக்கவிருக்கும் 60வது படத்தின் இயக்குனர் பரதன் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டரின் பெயரும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல எடிட்டரும் 'ஆரண்ய காண்டம்' என்ற திரைப்படத்திற்காக சிறந்த எடிட்டர் விருது பெற்றவருமான ப்ரவீண் கே.எல் அவர்கள் விஜய் 60' படத்தின் எடிட்டராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை ப்ரவீண் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ப்ரவீண் தனது சமூகவலைத்தளத்தில் இளையதளபதி விஜய்க்கும், இயக்குனர் பரதன் அவர்களுக்கும் தான் நன்றி கூறிக்கொள்வதாகவும், விஜய் ரசிகர்களின் பாச மழையால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.

விஜய் 60' படத்தின் இயக்குனர், எடிட்டர் ஆகியோர் அறிவிக்கப்பட்ட நிலையில் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

More News

ரஜினிகாந்த் பாராட்டிய 'மீன் குழம்பும் மண் பானையும்'

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 'சிவாஜி புரடொக்ஷன்ஸ்' நிறுவனம் பல தரமான வெற்றி படங்களை தயாரித்து வந்த நிலையில்...

'புலி' நடிகையின் அடுத்த பட ரிலீஸ் தேதி

அபியும் நானும், மொழி, பயணம், கெளரவம் உள்பட பல தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகனின் அடுத்த படமான 'உப்புக்கருவாடு'...

'மொட்டசிவா கெட்டசிவா' படப்பிடிப்பு ஆரம்பம்

சமீபத்தில் வெளியான 'காஞ்சனா 2' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள திரைப்படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'...

பிரபல டிவி தொகுப்பாளினி - பிரபுசாலமன் நாயகன் நிச்சயதார்த்தம்

சன் டிவி மற்றும் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் அஞ்சனாவுக்கும் நடிகர் சந்திரனுக்கு வரும் 29ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது...

கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ''பாபநாசம்'' மற்றும் ''தூங்காவனம்'' ஆகிய இரண்டு படங்களும் சீரியஸாக இருந்ததால் அடுத்த படத்தை முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் உருவாக்க கமல் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது....