விஜயகாந்த் கட்சியில் பிரேமலதாவுக்கு புதிய பதவி

  • IndiaGlitz, [Friday,October 19 2018]

விஜயகாந்த்தின் அரசியல் கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் விஜயகாந்த் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த கட்சியின் பொருளாளராக விஜயகாந்த் மனைவி பிரேமலதா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கட்சியின் எந்த பொருப்பிலும் இல்லாமல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே பிரேமலதா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இதுவரை தேமுதிகவின் பொருளாளராக இருந்த இளங்கோவன் தற்போது அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல கொள்கை பரப்பு செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார் திமுகவில் இணைந்த‌தால், அந்த பதவிக்கு அழகாபுரம் மோகன்ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகளில் விஜயகாந்தும் அவருடைய மனைவியும் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மதுரையில் நடிகர் வடிவேல் மகள் திருமணம்.

வைகைப்புயல் வடிவேலுவின் மகள் கலைவாணிக்கு இன்று மதுரையில் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

'பாரீஸ் பாரீஸ்' நான்கு மொழி ரீமேக் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

நடிகை கங்கனா ரனாவத் நடித்த தேசிய விருது பெற்ற திரைப்படமான 'குவீன்' தென்னிந்தியாவில் உள்ள நான்கு மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் ரீமேக் ஆகி வருவது தெரிந்ததே.

சபரிமலைக்கு சென்ற பெண்ணின் வீட்டின் மீது தாக்குதல்: பெரும் பரபரப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ஒருசில பெண்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு சென்றனர்.

இரண்டாம் பாக படங்கள் தோல்வி அடைவது ஏன்?

தமிழ் சினிமாவில் தற்போது இரண்டாம் பாக டிரண்ட் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த சில வருடங்களில் பல இரண்டாம் பாகங்கள் படம் வெளிவந்தாலும் அவை பெரும்பாலும் வெற்றி பெறவில்லை.,

மீடூ விவகாரம், ஆண்கள் மட்டும் காரணமில்லை: பிக்பாஸ் விஜயலட்சுமி

கோலிவுட் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறும் மீடூ விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்