close
Choose your channels

பிரேம்ஜி படத்தின் நாயகியாகும் பிக்பாஸ்-தமிழ் நடிகை: டைட்டில் அறிவிப்பு

Wednesday, July 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்தும் இசையமைத்து வரும் நிலையில் தற்போது அவர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது

‘சத்திய சோதனை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ரேஷ்மா நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே ’ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் மாதவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடும் நூல் தான் சத்தியசோதனை. அந்த டைட்டிலில் உருவாகும் இந்த படம் காமெடியுடன் ஒரு சமூக கருத்தையும் தெரிவிக்கும் படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.