close
Choose your channels

நான் அடிக்கும் சிக்ஸரை பிடிக்க தயாராகுங்கள். 'சென்னை 600028 II' குறித்து பிரேம்ஜி

Wednesday, November 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த 'சென்னை 600028' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
ஜெய், சிவா, பிரேம்ஜி, விஜயலட்சுமி உள்பட கிட்டத்தட்ட முதல் பாகத்தில் நடித்துள்ள அனைவருமே இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். மேலும் முதல் பாகத்தின் கதைக்களம் சென்னையாக இருந்த நிலையில் தற்போது இந்த இரண்டாம் பாகம் கிராம பின்னணியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் குறித்து நடிகர் பிரேம்ஜி கூறியபோது, '"எங்கள் 'சென்னை 600028' திரைப்படம் வெளியாகி ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் எங்கள் அணியினரின் உற்சாகமும், வேகமும் சிறிதளவு கூட குறையவில்லை. துடிப்பான அணியாக நாங்கள் செயல்படுவதற்கு அதுவே முக்கிய காரணம்.
ரசிகர்கள் அனைவரையும் மிகுந்த உற்சாகத்தோடு வைத்துக் கொள்ளும் சுவாரசிய காட்சிகள் பல எங்களின் இரண்டாம் பாகத்தில் இருக்கின்றது. இந்த இரண்டாம் ஆட்டத்தை காண வரும் ஒவ்வொரு இளம் ரசிகர்களும் சிக்ஸர் கோட்டை தாண்டி நான் அடிக்கும் பந்தை பிடிக்க தயாராக இருங்கள். அதுமட்டுமின்றி, நான் தோன்றும் காட்சிகள் அனைத்தும் இளம் பெண்களின் மனதை வெல்ல கூடியதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.