என்ன சொல்ல வர்ற.. ஒண்ணுமே புரியலையே.. பிரேம்ஜியின் 'சத்திய சோதனை' டிரைலர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நகைச்சுவை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ள ’சத்திய சோதனை’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிரேம்ஜி அமரன், பிக்பாஸ் ரேஷ்மா, கேஜி மோகன், செல்வம் முருகன், லட்சுமி உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கி உள்ளார். ஏற்கனவே ’ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரகுராம் இசையில் சரண் ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்ற பிரேம்ஜி காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார் என்பதும் அதிலிருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம் என்ன என்பதுதான் இந்த படத்தின் நகைச்சுவையான கதை என்பது குறிப்பிடத்தக்கது. சமூக அவலங்களை வெளிப்படுத்தும் கதை அம்சம் கொண்ட இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
sathiya sothanai teaser 🕺🏻💙 https://t.co/JHnbn5QvTz
— PREMGI (@Premgiamaren) February 23, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments