close
Choose your channels

திருத்தணி முருகன் கோவிலில் எளிமையாக நடைபெற்ற பிரேம்ஜி - இந்து திருமணம்..!

Monday, June 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

40 வயதுக்கு மேலாக முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜிக்கு நேற்று திருத்தணி முருகன் கோவிலில் இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரையுலகினர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மணமகன் பிரேம்ஜி, மணமகள் இந்து ஆகியோர் குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து உற்றார் உறவினர்களின் வாழ்த்துக்களுடன் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர்கள் சிவா, ஜெய், இயக்குனர் சந்தன பாரதி, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உள்ளிட்ட பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் மணமக்கள் முருகனை தரிசித்து வழிபட்ட நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவிடுகின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment