'இளையராஜாவுக்காக 'குட் பேட் அக்லி' ஓடவில்லை.. பிரேம்ஜியின் பரபரப்பு பேட்டி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இளையராஜாவுக்காக ஓடவில்லை என்றும், அந்த படம் தல அஜித்துக்காக தான் ஓடியது என்றும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி கூறியுள்ளார்.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் இளையராஜா கம்போஸ் செய்த சில பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, தயாரிப்பாளருக்கு இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து பரபரப்பான கருத்துகள் பரவி வரும் நிலையில், இளையராஜாவுக்கு ஆதரவாக சமீபத்தில் கங்கை அமரன் பேட்டி கொடுத்தார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரேம்ஜி, “என் அப்பா கங்கை அமரன் தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். நாளை என் அண்ணன் வெங்கட் பிரபுவுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், நான் ஆதரவாக கருத்து தெரிவிப்பேன்” என்று கூறினார்.
அதன்பின், ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இளையராஜாவின் பாடல்களுக்காக ஓடியதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த பிரேம்ஜி “அதெல்லாம் சும்மா. அந்த படம் யாருக்காக ஓடியது என்று எல்லோருக்குமே தெரியும். தல அஜித்துக்காக தான் ஓடியது. தல படம் தல ஒருவருக்காக தான் ஓடும்” என்றும் அவர் உறுதியுடன் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments