ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,June 08 2017]

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய நடைபெறும் தேர்தலின் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்த நிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையத் தலைவர் நஜிம் ஜைதி சற்று முன்னர் அறிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவித்த தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடைபெறும். ஜனாதிபதி தேர்தலில் எம்.பிக்கள் அனைவரும் வாக்களிப்பர். மாநில மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களின் வாக்கு மதிப்பீடு செய்யப்படும். ஜூன் 14 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும்' என்று குறிப்பிட்டார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆளும் பாரதிய ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் ஜனாதிபதி வேட்பாளர்களை மிக விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

லஞ்சம் கொடுத்த பணம் வீடுதேடி வரவேண்டுமா? 1100க்கு டயல் செய்யுங்கள்!

சாட்டிலைட் முதல் சகல துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் இந்தியா, லஞ்சத்தை ஒழிப்பதில் மட்டும் மிகவும் பின் தங்கியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் ஆசிய அளவில் அதிக லஞ்சம், ஊழல் நடைபெறுவது இந்தியாவில்தான் என்பது தெரிய வந்துள்ளது...

'பாகுபலி 2' படம் பார்க்க 10 ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன். தேசிய விருது இயக்குனர்

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் ஹிட் ஆகியது. இந்த படத்தின் வசூல் ரூ.1700 கோடியை நெருங்கி புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தை பெரும்பாலான திரையுலக பிரமுகர்கள் பாராட்டி வருகின்றனர்...

ரஜினியின் 'காலா' இன்று முதல் வேற லெவல் படப்பிடிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' கரிகாலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பயில் நடைபெற்று வருகிறது. மும்பை டான் மற்றும் முஸ்லீம் கேரக்டரில் ரஜினி நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதுவரை இந்த படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது...

ரஜினியுடன் முதலமைச்சர் மனைவி திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த போது அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பாக சில கருத்துக்களை கூறினார். அதுமுதல் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலரும், வரக்கூடாது என்று சிலரும் கூறி வருகின்றனர்....

தனுஷின் 'விஐபி 2': டீசர் விமர்சனம்

தனுஷ், அமலாபால், நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.