பிரதமர் உள்பட அனைத்து எம்பிக்களுக்கும் சம்பளம் குறைப்பு: 2 ஆண்டுக்கு எம்பி நிதியும் கிடையாது

பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஊதியமும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என மத்திய அமைச்சரவை சற்றுமுன் முடிவு செய்துள்ளது. அதேபோல் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், அனைத்து மாநில ஆளுநர்களும் ஒரு வருடத்திற்கு தாமாக முன்வந்து தங்களின் சம்பளத்தின் 30% குறைத்துக் கொண்டுள்ளனர் என் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் உள்பட அனைவரின் சம்பளம் குறைத்ததால் கிடைக்கும் நிதி, கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என்றும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப்படுவதாகவும், எம்.பி-க்களின் தலா 10 கோடி ரூபாய் நிதி அரசு நிதியில் சேர்க்கப்படும் என்றும் மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது

More News

இனி, கொரோனா நோயாளிகளைப் பயப்படாமல் அழைத்துச் செல்லலாம்!!! மருத்துவர்கள் உருவாக்கிய புதிய வாகனம்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கும்போது மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது.

கொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய பாஜக பிரமுகர்!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு தெருக்களில் வீசப்படும் கொரோனா பிணங்கள்!!!  ஈக்வடார் சந்தித்துவரும் நெருக்கடி!!!

பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத ஈக்வடார் கொரோனா பாதிப்பினால் கடும் நெருக்கடி நிலைமையை சந்தித்துவருகிறது.

ரஜினியுடன் அமிதாப், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி நடித்த படம் இன்று ரிலீஸ்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அனைவரும் வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும்

கொரோனாவுக்கு பயந்து, தற்கொலை செய்துகொண்ட கால்பந்து அணியின் மருத்துவர்!!!

பிரெஞ்சு, கால்பந்து Ligue 1 Club Reims அணியின் மருத்துவர் கோன்சலஸ் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்ட நிலையில் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.