வெற்றிக்கு காரணமான சாஹலை கட்டிப்பிடித்து கொண்டாடிய நடிகை.. வைரல் புகைப்படம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமான பந்துச்சாளர் சாஹைலை அணியின் உரிமையாளர் மற்றும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணி வெறும் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து, ஷாருக்கானின் கொல்கத்தா அணி மிக எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொல்கத்தா அணி 95 ரன்களில் பஞ்சாப் அணியின் அபார பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சுருண்டது.
குறிப்பாக, பஞ்சாப் அணியின் சுழல் பந்துவீச்சாளர் சாஹல் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஆட்டநாயகன் விருதும் சாஹலுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெற்றிக்கு பின் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, சாஹலை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது மட்டும் இன்றி, அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உட்பட அணி வீரர்களை அவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com