அமைச்சரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் உயிரிழப்பு!!! அதிர்ச்சி ஏற்படுத்தும் பரபரப்பு சம்பவம்!!!

  • IndiaGlitz, [Thursday,July 09 2020]

 

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு வீடு திரும்பியதும் உயிரிழந்து உள்ளார். இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. 61 வயதான அமாடோ கோன் கோலிபாலி கடந்த இரண்டு மாதங்களாக கடுயைமான இருதய நோயால் பாதிக்கப் பட்டு இருந்தார் எனக் கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் சிகிச்சை மேற்கொண்டு இருந்த பிரதமர் சில தினங்களுக்கு முன்பு ஐவரி கோஸ்ட் திரும்பியுள்ளார். மேலும் அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொண்டு இருக்கிறார்.

ஐவரி கோஸ்ட்டில் வரும் அக்டோபர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற விருக்கிறது. அத்தேர்தலில் ஆளம் கட்சி சார்பாக பிரதமர் கோன் கோலிபாலி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அதிபராக பதவி வகித்துவரும் அலசானி ஒட்டாரா மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் போட்டியிட விரும்பவில்லை என்ற அறிக்கை வெளியாகி இருப்பதால் ஆளும் கட்சியின் சார்பில் கோன் கோலிபாலி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார். நாட்டு மக்களால் பெரிதும் விரும்பப்படும் இவர் தற்போது உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிபர் பதவிக்கு நம்பிக்கை மிக்க வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர் உயிரிழந்து இருக்கிறார். இதனால் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பது குறித்து கணிக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. பிரதமரின் உயிரிழப்பால் நாட்டு மக்கள் சோகமாக உள்ளனர் என்ற செய்தியை தற்போது உள்ள அதிபர் அலசானி ஒட்டாரா செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.