close
Choose your channels

'அடங்கமறு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

Tuesday, January 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கிய 'அடங்கமறு' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் திருவிழா படங்களில் ஒன்றாக பெரும் போட்டிகளுக்கு இடையே வெளிவந்து வெற்றி பெற்றது. டிசம்பர் 20,21 ஆகிய தேதிகளில் வெளியான ஐந்து படங்களில் சென்னையில் அதிக வசூல் பெற்ற படமாகவும், வெற்றிப்படமாகவும் அமைந்தது.

இந்த நிலையில் 'அடங்கமறு' வெற்றியை அடுத்து தற்போது இயக்குனர் கார்த்திக் தங்கவேல் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். கார்த்தி நடித்து வரும் 'தேவ்' படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கவிருப்பதாகவும், இந்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தில் புதிய வாய்ப்பு பெற்ற கார்த்திக் தங்கவேலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவருடைய அடுத்த படமும் வெற்றி அடைய நமது வாழ்த்துக்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.