close
Choose your channels

6 வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டா கணக்கு: மணிரத்னம் பட நடிகர் ஆவேசம்!

Tuesday, November 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகரும் மணிரத்தினம் இயக்கிய ராவணன் உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்தவருமான நடிகர் பிருத்விராஜ் தனது 6 வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கியுள்ளது குறித்து ஆவேசமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியபோது ’என்னுடைய ஆறு வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு இருப்பதாகவும் அதனை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த இன்ஸ்டா பக்கம் எங்களால் நிர்வாகம் செய்யப்படும் பக்கம் அல்ல என்றும் ஆறு வயது சிறுமி ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனது மகள் வளர்ந்த பிறகு இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்க வேண்டுமா என்பதை அவரே தீர்மானித்து கொள்வார் என்றும், இந்த போலியான கணக்கை உண்மை என நம்பி இந்த கணக்கை யாரும் ஃபாலோ செய்ய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆறு வயது குழந்தையின் பெயரில் போலியாக கணக்கு தொடங்குவது வெட்கக் கேடானது என்றும் குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் பிரத்விராஜின் இந்த ஆவேசமான இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.