close
Choose your channels

ஜனவரி 25-ல் வெளியாகிறது விஜய் ரசிகரின் படம்

Sunday, January 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய் ரசிகர் கேரக்டர்களில் பல கோலிவுட் நடிகர்கள் தங்கள் படங்களில் நடித்திருக்கும் நிலையில் மலையாள நடிகர் ஒருவர் விஜய்யின் ரசிகராக நடித்து வருகிறார். ராவணன், மொழி, காவியத்தலைவன், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்த ப்ரித்திவிராஜ் தற்போது நடித்து வரும் 'பாவாட. இந்த படத்தில் விஜய்யின் தீவிர ரசிகராக நடித்திருக்கும் ப்ரித்திவிராஜ், விஜய்யின் 'துப்பாக்கி' பட ரிலீஸ் நேரத்தில் அடித்து பிடித்து தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் காட்சி உள்பட பல காட்சிகளில் விஜய்யின் வெறித்தனமான ரசிகராக நடித்துள்ளாராம்.

மார்த்தாண்டன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ப்ரித்திவிராஜூக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் மற்றும் முக்கிய கேரக்டரில் 'பாபநாசம்' புகழ் ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர். கேரளாவில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை கவரவே ப்ரித்திவிராஜ் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஸ்டில்கள் அனைத்துமே விஜய் ஸ்டைலில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.