close
Choose your channels

2021ல் டிகிரி முடித்திருந்தால் வேலை கிடையாதா? அதிர்ச்சி தகவல்

Wednesday, August 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2021 ஆம் ஆண்டு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என தனியார் வங்கி ஒன்றின் வேலை வாய்ப்பு விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கல்வி ஆண்டில் அதாவது 2020-21 கல்வி ஆண்டில் மாணவர்கள் ஒருநாள்கூட பள்ளி கல்லூரிகளுக்கு செல்லவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் படித்தார்கள் என்பதும் தேர்வுகளும் ஆன்லைனில் மட்டுமே எழுதினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த ஆண்டு டிகிரி முடித்த மாணவர்களின் திறன் குறித்த சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரபல தனியார் வங்கி ஒன்று தங்களது மதுரை கிளைக்கு வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் ஒன்றை செய்தது. இந்த விளம்பரத்தில் 2021 ஆம் ஆண்டில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை என குறிப்பிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தகவல் இணையதளங்களில் புகைப்படத்துடன் வைரலானதை அடுத்து அந்த வங்கியின் நிர்வாகிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளம்பரத்தில் தவறுதலாக 2021 ஆம் ஆண்டில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அந்த தவறு தற்போது சரி செய்யப்பட்டு புதிய விளம்பரம் செய்யப்பட்டு உள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு டிகிரி முடித்தவர்களூம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த செய்தி 2021 ஆம் ஆண்டில் டிகிரி முடித்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.