close
Choose your channels

'தர்பார்' ரிலீஸ்: சம்பளத்துடன் விடுமுறை அளித்த நிறுவனம்!

Monday, January 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெளியாகும் போது மட்டுமே சில அபூர்வமான செய்திகள் வெளியாகும். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறையை ஒரு சில தனியார் நிறுவனங்கள் அளிப்பதோடு அந்த படத்திற்கான டிக்கெட்டையும் வழங்கி வருகின்றன என்பது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்துள்ளோம்

அந்த வகையில் வரும் 9-ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 'தர்பார்’ திரைப்படத்தை பார்ப்பதற்காக 9ஆம் தேதி அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்றும் அது மட்டுமின்றி அந்த படத்திற்கான டிக்கெட்டுகளும் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்

இந்த அறிவிப்பால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும்போது மட்டுமே இதுபோன்ற அறிவிப்புகளை ஒரு சில தனியார் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.