ஷாப்பிங் சென்ற இடத்தில் சோகமாக உட்கார்ந்திருக்கும் ப்ரியா: அட்லி காரணமா?

’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி அதன்பின் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார். விரைவில் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தையும் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் அட்லி கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. அட்லியும் ப்ரியா அட்லியும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்கள் என்பதும் அவ்வப்போது அவர்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ப்ரியா அட்லி தனது சமூக வலைத்தளத்தில் ஷாப்பிங் சென்ற இடத்தில் சோகமாக உட்கார்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கேப்ஷனாக ’கணவர் ஷாப்பிங்கில் பிசியாக இருக்கும்போது’ என்று பதிவு செய்துள்ளார்.

பொதுவாக ஷாப்பிங் செல்லும்போது மனைவிகள் தான் மணிக்கணக்கில் ஷாப்பிங் செய்து கொண்டிருப்பார்கள், கணவர்கள் சோகமாக உட்கார்ந்து இருப்பார்கள். ஆனால் ப்ரியா அட்லி விஷயத்தில் தலைகீழாக அட்லி, மணிக்கணக்கில் ஷாப்பிங் செய்து கொண்டிருக்க, அவர் சோகமாக உட்கார்ந்து இருப்பதாக அவரது பதிவிலிருந்து தெரியவருகிறது.