close
Choose your channels

'ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ': தன்னையே கலாய்த்து கொண்ட ப்ரியா பவானிசங்கர்

Friday, June 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் தற்போது பிசியான நடிகைகளில் ஒருவர் என்றால் அது ப்ரியா பவானி சங்கர் தான் இவர் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ப்ரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அதில் ’ஹேய் நல்லா சர்க்கஸ் பண்ற மேன்’ என்று தன்னைத்தானே கலாய்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

நடிகை ப்ரியா பவானிசங்கர் சற்றுமுன் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள புகைப்பட தொகுப்பில் ஜிம்மில் அவர் உட்கார்ந்து இருப்பது போன்றும், கயிற்றில் அவர் தொங்கி கொண்டு இருப்பது போலவும் உள்ளது. இந்த புகைப்படத்தை தான் அவர் தன்னை தானே கலாய்த்து கேப்ஷனை பதிவு செய்துள்ளார் என்பதும், ப்ரியா பவானி சங்கரின் ஃபாலோயர்கள் இந்த புகைப்படங்களுக்கு சுவாரஸியமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ப்ரியா பவானி சங்கர் தற்போது கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ சிம்புவின் ’பத்து தல’ ராகவா லாரன்ஸின் ’ருத்ரன்’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.