ப்ரியா பவானிசங்கரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,November 13 2019]

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் ப்ரியா பவானிசங்கர். எஸ்ஜே சூர்யாவின் ’மான்ஸ்டர்’, கடைக்க்குட்டி சிங்கம் உள்ளிட்ட ஒரு சில வெற்றிபடங்களில் நடித்த ப்ரியா பவானிசங்கர் தற்போது இயக்குனர் ராதாமோகன் இயக்கி வரும் ‘பொம்மை’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ’மான்ஸ்டர்’ படம் போலவே இந்தப் படத்திலும் அவர் எஸ்ஜே சூர்யாவின் ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைக்காலஜிக்கல் திரில்லர் கதையம்சம் கொண்ட படத்தில் சாந்தினி தமிழரசன் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் அவர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தவிர மேலும் கார்த்திக் நரேன் இயக்கிவரும் ’மாபியா’ மற்றும் ’களத்தில் சந்திப்போம்’, ’கசடதபற’ போன்ற படங்களில் நடித்து வரும் ப்ரியா பவானிசங்கர், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் த்ரில் பட இயக்குனர்?

தளபதி விஜய், மாளவிகா மேனன், ஆண்ட்ரியா உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ்

சல்மான்கான் படத்தில் பரத் வில்லனா? அதிகாரபூர்வ தகவல்கள்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கும் 'ராதே' என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் தமிழ் நடிகர் பரத் நடித்த உள்ளதாக வெளிவந்த செய்தியில் ஏற்கனவே பார்த்தோம்.

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!

'இதுதாண்டா போலீஸ்' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகர் ராஜசேகர்.

தற்கொலைக்கு முயன்ற நண்பனை சாதூர்யமாக காப்பாற்றிய சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்

தந்தை இறந்த சோகத்தை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக்கொள்ள தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுவன் ஒருவனை அவனுடைய நண்பன் சாதுரியமாக

துணை முதல்வருக்கு மனைவியாகும் தனுஷ் பட நாயகி!

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் 'ஆக்சன்'. இந்த படம் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது.