இந்த 3 மூன்று இயக்குனர்கள் படங்களில் கதையே கேட்காமல் நடிக்க தயார்: ப்ரியா பவானி சங்கர்..!

  • IndiaGlitz, [Friday,June 16 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் இந்த மூன்று இயக்குனர்கள் படங்களில் கதையே கேட்காமல் நடிக்க தயார் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் பிஸியான நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். அவர் எஸ் ஜே சூர்யாவின் 'பொம்மை' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி 'இந்தியன் 2', 'டிமான்டி காலனி 2', 'ஜீப்ரா' 'அரண்மனை 4' ஹரி-விஷால் இணையும் படம் உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த பிரியா பவானி சங்கர் ’மான்ஸ்டர்’ படத்தை இயற்றிய நெல்சன் வெங்கடேசன், ’பொம்மை’ படத்தை இயக்கிய ராதா மோகன் ஆகியோர்களின் அடுத்த படங்களில் கதையே கேட்காமல் நடிக்க தயார் என்று கூறினார்

மேலும் தான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் வெற்றிமாறன் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் என்றும் அவரது படத்திலும் கதை கேட்காமல் நடிக்க தயார் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து வெற்றிமாறன் உள்பட 3 இயக்குனர்களும் தங்களது அடுத்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரை நடிக்க வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரு சிறிய மாற்றம்.. 'லியோ' லேட்டஸ்ட் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

'ஆதிபுருஷ்' படம் ஓடிய திரையரங்கில் குரங்கு.. அனுமனே வந்துவிட்டதாக ரசிகர்கள் பரவசம்..!

பிரபாஸ் நடித்த 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு

தலைகீழாக வேற லெவலில் யோகா செய்யும் ரம்யா பாண்டியன்.. வைரல் வீடியோ..!

நடிகை ரம்யா பாண்டியன் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை மட்டும் இன்றி யோகா மற்றும் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்

'அவர் இன்னும் குழந்தை தான்': பிரபல இயக்குனரின் 40 வயது மகன் குறித்து குஷ்பு..!

பிரபல இயக்குனரின் மகன் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நடிகை குஷ்பு அவர் இன்னும் குழந்தை தான் என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஒரு வருடம் மிகவும் சவாலானது.. செர்பியா சர்ச்சில் பிரார்த்தனை செய்த பின் சமந்தாவின் பதிவு..!

கடந்த ஒரு வருடம் தனக்கு மிகவும் சவாலானது மற்றும் கடினமானது என்று செர்பியா சர்ச்சில் பிரார்த்தனை செய்த பின் சமந்தா உருக்கமாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.