விஷாலின் அடுத்த படத்தின் நாயகியா? ரசிகரின் கேள்விக்கு ப்ரியா பவானிசங்கர் அளித்த பதில்!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

விஷாலின் அடுத்த படத்தில் நாயகி நீங்களா? என ப்ரியா பவானி சங்கரிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

நடிகை ப்ரியா பவானி சங்கர் தற்போது ’இந்தியன் 2’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘பொம்மை’, ‘ஹாஸ்டல்’, ‘ருத்ரன்’, ‘பத்து தல’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும், கோலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகையாக அவர் உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஷால் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’விஷால் 32’ திரைப்படத்தை ’அடங்கமறு’ இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் ப்ரியா பவானி சங்கரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ப்ரியா பவானி சங்கர் ’இப்போதைக்கு நானும் விஷாலும் இயக்குனர் கார்த்திக்கும் எங்களுடைய அன்புக்குரியவர்களை பாதுகாக்கும் முயற்சியில் உள்ளோம். உங்களது அன்புக்குரியவர்களையும் பாதுகாப்போம். நிலைமை அனைத்தும் சரியானதும் இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும்’ என்று பதில் கூறியுள்ளார். இதனை அடுத்து விஷால் படத்தில் அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 

More News

விஜய் ஆண்டனி பட நாயகியின் பிகினி புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

விஜய் ஆண்டனி படத்தில் நடித்த நாயகி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மனைவி மறைவு குறித்து உருக்கமான பதிவு செய்த அருண்ராஜா காமராஜ்!

பிரபல இயக்குனர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில் தனது மனைவியின் மறைவு குறித்து

முதல்வருக்கு டுவிட் போட்ட விஜய்சேதுபதி பட இயக்குனர்: உடனடியாக கிடைத்த ஆக்சிஜன் பெட்!

விஜய் சேதுபதி நடித்த சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் அவதிப்படுவதாக டுவிட் ஒன்றை பதிவு செய்தை அடுத்து உடனடியாக

ஒரே மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தினால் கருப்பு பூஞ்சை நோய் வருமா?

இந்தியா முழுக்கவே தற்போது கருப்பு பூஞ்சை தொற்றுநோய் பீதியை கிளப்பி வருகிறது.

தி ஃபேமிலி மேன்’-ன் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியீடு! 

இரண்டே நாட்களில் 37 மில்லியனுக்கும் அதிகமான பார்வைக் காட்சிகளைப் பெற்றிருக்கிறது அனைவர் மீதும் தங்களது அன்பையும்