close
Choose your channels

பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறாரா ப்ரியா பவானிசங்கர்?

Sunday, October 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி எதிர்பாராதவிதமாக நமீதா வெளியேறிய நிலையில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் இதில் இன்று ஒருவர் வெளியேற போகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு பிரபல நடிகை பிரியா பவானிசங்கர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் போட்டியாளராக இல்லாமல் அவரது படத்தின் புரமோஷனுக்காக செல்ல இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரியா பவானிசங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’ஓமண பெண்ணே’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இந்த படம் வெளியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானிசங்கர் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

ஹரிஷ் கல்யாண் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் என்பதால் அவர் மலரும் நினைவுகளை பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும்போது மீண்டும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.