close
Choose your channels

அதர்வாவுக்கு ஜோடியாகும் 'கடைகுட்டி சிங்கம்' நடிகை

Saturday, September 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, சாயிஷா நடித்த 'கடைகுட்டி சிங்கம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை பிரியா பவானிசங்கர், அதர்வாவின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

'செம போத ஆகாதே' மற்றும் 'இமைக்கா நொடிகள்' படங்களை அடுத்து அதர்வா நடிக்கவுள்ள படம் 'குருதியாட்டம்'. ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ள இந்த படத்தில் அதர்வா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மதுரை டீச்சராக பிரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளதாகவும், இந்த கேரக்டருக்கு ஒரு தமிழ்ப்பெண் தேவை என்பதால் பிரியாவை தேர்வு செய்ததாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாகவும் முதல்கட்டமாக அதர்வா, பிரியா பவானிசங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.